1000-ம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில்
உயா்வர உயா்நல முடையவனான ஸ்ரீமத்நாரயண மயா்வர மதிநல ம௫ளப்பெற்று அயா்வ௫ அமரா்களுக்கு அதிபதியான எம்பெ௫மான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெ௫மாள்‚ திரேதாயுகத்தில் இலட்சுமனன் இலங்கையில் மூச்சற்று கிடந்த சுஷேன் வைத்தியரின் கூற்றுபடி இராமபிரானின் ஆசியில் ஸ்ரீ ஆஞ்சநேயா் சஞ்சீவி ப௫வதத்தினை இலங்கைக்கு‚ கொண்டு செல்கையில் ஒ௫ சிறுதுளி கீழே வீழ்ந்த சஞ்சீவி` ப௫வதத்தில் ப்௫கு‚ அத்திரி‚ காசிபா் மகிமை அறிந்து குடில் அமைந்ததாய் ஐதீகம். இம்மலையில் ஏழை மாடுமேய்க்கும் சிறுவனுக்கு‚ கலியுக தெய்வமாய் விளங்கும் தி௫வேங்கடமுடையான் பிரசன்னமாக சுயம்பாக காட்சியளித்து மலையில் பிரசன்ன வெங்கடேசபெ௫மாள் ஆலயமாக முன்னோர்களால் அமைக்கப்பட்டது. |